search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா பனிப்புயல்"

    அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக 1400 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. #USSnowFall
    சிகாகோ:

    அமெரிக்காவில் நெப்ராஸ்கா, அயோவா, கொலராடோ ஆகிய மாநிலங்களில் கடும் பனிப்புயல் வீசுகிறது. திடீரென தட்பவெப்ப நிலை மோசமானதால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

    கடும் பனிப்புயல் காரணமாக மேற்கண்ட 3 மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் கடும் பனி கொட்டுகிறது. டென்வர் விமான நிலையத்தில் ஓடு தளங்கள் அனைத்தும் பனியால் மூடிக்கிடக்கின்றன.

    இதனால் அங்கு வந்து செல்லும் 1400 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    கொலராடோ மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தேசிய பாதுகாப்பு படைகளின் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    நெப்ராஸ்காவில் இன்று இரவு பனிப்புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கும் தேசிய பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    பனிப்புயல் தாக்கம் உள்ள கொலராடோ, நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் ஆபத்தான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கொலராடோவில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு லட்சக்கணக்கான வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. வயூமிங் நகரில் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. #USSnowFall
    அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பனிப்பொழிவால் விமானங்களை இயக்க முடியவில்லை. இதனால் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #USSnowstorm
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இது குளிர்காலம் ஆகும். அங்கு தற்போது கடுமையான குளிர் வீசுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர்.

    நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குளிர் மிக மோசமாக இருக்கிறது.

    சிகாகோவில் மைனஸ் 30 டிகிரி அளவிலும், மிச்சிகனில் மைனஸ் 37 டிகிரி அளவிலும் குளிர் நிலவுகிறது. இது, மைனஸ் 40 டிகிரியை தாண்டும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

    துருவ பகுதியில் இருக்கும் குளிரை விட இப்போது அமெரிக்காவில் அதிக குளிர் வீசுகிறது. பல இடங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதுடன் கடும் குளிர் காற்றும் வீசுகிறது.



    சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பல இடங்களில் விமானத்தை இயக்க முடியவில்லை. இதனால் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இருக்கிறன.

    கடும் குளிருக்கு தாக்கு பிடிக்க முடியாது என்பதால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று சிகாகோ மேயர் அறிவித்துள்ளார்.

    அங்குள்ள கிரேட் லேக்ஸ், நியூ இங்கிலாந்து பகுதியில் நேற்று கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை.

    விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸ், மிசிசிப்பி, அலபாமா ஆகிய மாநிலங்களில் குளிர் நிலை மிக மோசமாக இருப்பதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. #USSnowstorm
    அமெரிக்காவில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. ரோடுகளில் கொட்டிக்கிடக்கும் பனியால் விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். #USSnowStorm
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. தலைநகர் வாஷிங்டனில் வழக்கத்தை விட 2 முதல் 4 அங்குல அளவுக்கு அதிகமாக பனி கொட்டியது.

    இதனால் ரோடுகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பனியால் போர்த்தப்பட்டு உள்ளது. வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா, சோரி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாஷிங்டன் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலவிமானங்கள் தாமதமாக வருகின்றன.  அனேகமான விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    ரோடுகளில் கொட்டிக்கிடக்கும் பனியால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. விர்ஜீனியாவில் விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.  #USSnowStorm
    அமெரிக்காவில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. எனவே 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. #USSnowStorm
    நியூயார்க்:

    அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    அங்கு பனி மழை போன்று கொட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் பாதி அளவு பகுதி வெள்ளை போர்வையால் போர்த்தியது போன்று காட்சி அளிக்கின்றன.

    தெற்கு டென்வரில் உள்ள சாங்ரீ டி கிறிஸ்டோ மலைப் பகுதியில் 45 செ.மீ. அளவுக்கு பனி உறைந்து கிடக்கிறது. மேற்கு மிசோரி மற்றும் செயிண்ட் லூயிஸ் பகுதியில் 41 செ.மீ. அளவுக்கு பனி கொட்டிக்கிடக்கிறது.


    கிழக்கு பகுதியில் உள்ள கன்சாஸ் மற்றும் ஆர்கன் சாசில் 15 செ.மீ. அளவுக்கும், வாஷிங்டன் டி.சி.யில் 10 செ.மீ. பனியும் உறைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. எனவே 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    12,645 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன. கடும் பனி மூட்டம் காரணமாக அமெரிக்காவில் ஏராளமான விமான நிலையங்கள் பாதிப்புக்குள்ளாகின. #USSnowStorm
    அமெரிக்காவில் பனிப்புயல் வீசியதால் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கடும் பனிப்புயலுக்கு 3 பேர் பலியாகினர். #Snowstorm #USWeather #FlightsCancelled
    சிகாகோ:

    அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் ரோடுகள் மற்றும் வீடுகள் மீது பனி கொட்டுகிறது. டகோடா, மின்னெசோட்டா, கன்சாஸ் மற்றும் அயோவா மாகாணங்களில் பனி கொட்டிக் கிடப்பதால் ரோடுகள் மூடப்பட்டுள்ளன.

    விமான நிலையங்களில் 8 முதல் 18 அங்குலம் அளவுக்கு பனி உறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5700 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.


    கடும் பனிப்புயலுக்கு 3 பேர் பலியாகினர். லூசியானாவில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் 58 வயது பெண் பலியானார். கன்சாசில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இவர் தவிர மேலும் ஒருவர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Snowstorm #USWeather #FlightsCancelled
    அமெரிக்காவில் பனிப்புயல் வீசியதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விடுமுறைக்காக வெளியூர் செல்ல திட்டமிட்ட பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர். #Snowstorm #USWeather #FlightsCancelled
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. அதிக அளவில் பனி படர்ந்துள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுதவிர அவ்வப்போது பனிப்புயலும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் வீசியது. இதன் காரணமாக 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 6500க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. குறிப்பாக வடக்கு டகோட்டாவில் உள்ள பார்கோ விமான நிலையம் மூடப்பட்டு, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.


    மத்திய மற்றும் மேற்கு சமவெளிப் பகுதிகளில் மழை, பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசியது. இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.  இன்றும் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான பயணிகள் வெளியூர் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். பனிப்புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். #Snowstorm #USWeather #FlightsCancelled
    அமெரிக்காவில் கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக இன்று 1600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #SnowStorm #USBadWeather #FlightsCancelled
    மாஸ்கோ:

    அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    மத்திய மேற்கு மாநிலங்களில் பனிப்புயல் காரணமாக இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாகவும், சில மாநிலங்களில் 12 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று பனிப்புயல் வடமேற்கு மாநிலங்களை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இந்நிலையில், பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகபட்சமாக 770 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  15000 விமானங்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

    பனிப்புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் 1.4 கோடி மக்கள் வசிக்கின்றனர். கடுமையான காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கன்சாஸ், மிசவுரி, நெப்ரஸ்கா, அயோவா மாநிலங்களில் 2 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #SnowStorm #USBadWeather #FlightsCancelled
    ×